×

கட்டாய மதமாற்றத்தை தடுக்க உடனடியாக சட்டம் வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

புதுடெல்லி: நாடு முழுவதும் கட்டாய மத மாற்றத்திற்கு எதிரான சட்டத்தை உடனடியாக கொண்டு வரவேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் புதிய வழக்கு தொடரப்பட்டுள்ளது. தஞ்சாவூர் அருகே, மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் படித்த, அரியலூரை சேர்ந்த லாவண்யா என்ற 17 வயது மாணவி, பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரை மதம் மாறும்படி பள்ளி நிர்வாகம் வற்புறுத்தியதால் மாணவி தற்கொலை செய்ததாக புகார் எழுந்தது. ஆனால், பள்ளி நிர்வாகம் இந்த குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்தது. இதையடுத்து இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, இதுதொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றி நேற்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த விவகாரத்தை தேசிய குழந்தைகள் நல பாதுகாப்பு ஆணைமும் கையிலெடுத்து விசாரித்து வருகிறது.இந்த நிலையில் மூத்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு புதிய மனு ஒன்றை நேற்று தாக்கல் செய்துள்ளார். அதில், ‘தமிழக மாணவி லாவண்யா உயிரிழந்தது தொடர்பான வழக்கை சிபிஐ மற்றும் என்.ஐ.ஏ ஆகிய அமைப்புகள் விசாரிக்க வேண்டும். மேலும் நாடு முழுவதும் கட்டாய மதமாற்றத்திற்கு எதிரான சட்டத்தை உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என தெரிவித்துள்ளார். இவ்வழக்கு அடுத்த ஓரிரு நாளில் உச்சநீதிமன்றத்தில் விராணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது….

The post கட்டாய மதமாற்றத்தை தடுக்க உடனடியாக சட்டம் வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,New Delhi ,
× RELATED வாக்காளர் ரகசியம் மீறப்படுவதாக...